states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி

தில்லி கலவர வழக்கில் உமர் காலித்துடன் குல்பிஷா பாத்திமா 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவர் ஒரு மாணவி. அவர் இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க உச்சநீதிமன்றத்தில் கோரினேன். ஆனால் உச்சநீதிமன்றம் முன்கூட்டியே விசாரணைக்கு மறுத்துவிட்டது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

ஜிஎஸ்டி வரி குறைப்பால் மேற்கு வங்கத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். வரிவிகிதங்களை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் யோசனை கூட தெரிவிக்கப்பட்டது. ஆனால், வரிகுறைப்புக்கு பிரதமர் மோடி அவர்களே! நீங்கள் ஏன் சொந்தம் கொண்டாடுகிறீர்கள்? 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த வரி காரணமாகவே, உள்நாட்டில் வரி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மோடி அரசு தள்ளப்பட்டது. அதனால் தான் ஜிஎஸ்டி வரியை குறைத்து பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் அதனை ஒரு திருவிழா போல கொண்டாடுகிறார்கள்.

ஊடகவியலாளர் முகேஷ் குமார்

ஜெர்மனியின் தொழிலதிபர்கள் அனைவரும் ஹிட்லரை ஆதரித்தனர். பதிலுக்கு ஹிட்லர், அவர்க ளுக்கு பல சலுகைகளை வழங்கினார். அதே போல இந்தியாவில் அதானியும், அம்பானியும் இதைத்தான் செய்கிறார்கள். தேசப்பற்றை பேசி, மோடியையும் சங் பரிவார அரசியலையும் ஆதரிக்கிறார்கள். அவர்களின் விருப்பம் லாபம் மட்டும்தான்.