டெல்லியில் நீடிக்கும் காற்று மாசுபாட்டால் மறு அறிவிப்பு வரும்வரை பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் அபாய கட்ட அளவில் இருப்பதால், டெல்லி மக்கள் திண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் 20 ஆம் தேதி வரை மூடப்பட்டன. மேலும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டன.
டெல்லியில் காற்றின் தரம் சீரடையாததால் தலைநகரிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படும் வேண்டும் என காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது.