states

img

பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு

ராகுல் காந்தி பங்கேற்பு

சண்டிகர், செப்.20- பஞ்சாப்பில் சரண்ஜித் சிங் சன்னி திங்களன்று புதிய முதல்வராக பதவி யேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர். பஞ்சாப்பில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது.  இந்நிலையில் பஞ்சாப் சட்டப் பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைமை உத்தரவை ஏற்று அமரீந்தர் சிங் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அமரீந்தர் சிங்கின் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்தவரும், பஞ்சாப் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான சரண்ஜித் சிங் சன்னிக்குக் கட்சி உறுப்பினர் களிடையே ஒருமித்த ஆதரவு கிடைத்தது. இதனால், அவர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவர், தலித் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்.  இந்நிலையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி,  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை புதிய அரசு அமைக்குமாறு பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார். அதன்படி, திங்களன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஓ.பி.சோனி, சுக்ஜிந்தர் ரந்தவா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில், காங்கிரஸ் முன்னாள் தலை வர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். பஞ்சாப் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

‘‘நானும் ஆம் ஆத்மி தான்’’ 

பஞ்சாப் முதல்வராக திங்கள ன்று பதவியேற்று கொண்ட சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சில கட்சிகள் ஆம் ஆத்மி (சாதா ரண மக்கள்) பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றன. நானும் ஆம் ஆத்மி தான். இது ஆம் ஆத்மி அரசு. நான் சாதாரண மனிதர், விவசாயி, ஒடுக்கப் பட்ட மக்களுக்கும் பிரதிநிதி. நான் பணக்காரர்களின் பிரதிநிதி அல்ல. என் தந்தை குடிசை அமைக்கும் தொழில் செய்து வந்தார்.  மணல் அள்ளுபவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடு பவர்கள் என்னிடம் வர வேண்டாம். நான் உங்கள் பிரதிநிதி அல்ல. நான் ஏழை மக்களின் பிரதிநிதி. ஏழைகளுக்கு தண்ணீர் கட்டணத் திலிருந்து விலக்கு அளிக்கப்படும். பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய நட வடிக்கை எடுக்கப்படும். தனிநபர் களை விடவும் கட்சி மிக உயர்ந்தது. கட்சி முடிவுகளை எடுக்கும், அரசு அவற்றை செயல்படுத்தும். அது கட்சிக்கு நன்மை கொடுக்கும் என்றால் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.