சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் சுனில் சிங்
தகுதியுள்ள ஒவ்வொரு நபரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்யும் கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. இது அரசியலமைப்பு அளித்த உரிமை. ஆனால் தற்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சர்ச்சையாகவே உள்ளது. முதலில் பாஜகவின் கருவியாகச் செயல்படவில்லை என தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. அதனால் பீகார் சட்டமன்ற தேர்தல் நிறைவு பெறும் வரை எஸ்ஐஆரை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அவசரம் காட்டுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி
பீகாரில் எஸ்ஐஆர் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்கள் மற்றும் சிறுபான்மையினரின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் இதுவரை தெரிவிக்கவில்லை. கேள்வி கேட்டாலும் பதில் இல்லை. வாக்குகளை நீக்க மட்டுமே தேர்தல் ஆணையத்தை பாஜக பயன்படுத்துகிறது. ஜனநாயகத்தின் படி தேர்தலை நடத்த அல்ல.
சிவசேனா (உத்தவ்) பொதுச் செயலாளர் ஆதித்யா தாக்கரே
பாஜக ஆளும் ம.பி., மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதை விட, அம்மாநில அமைச்சரின் (விஜய் வர்கியா) அடாவடி பேச்சு வருத்தமளிக்கிறது. ஒரு பெண் நம் நாட்டு நகரங்களின் தெருக்களில் நடப்பது ஒரு குற்றமா?
