ஆசியான் உச்சிமாநாட்டில் ஜெய்சங்கர்-அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு
ஆசியான் கூட்டமைப்பின் (தென்கிழக்கு ஆசிய நாடுகள்) 47ஆவது உச்சி மாநாடு மலேசி யா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் அக்., 26 அன்று தொடங்கியது. அக்., 28 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கோலாலம்பூர் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோவை சந்தித்து அவ ருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வர்த்தகப் பேச்சுவார்த்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது 50% வரி விதித்ததோடு, ரஷ்யாவிடம் கச்சா எண் ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25% அபராத வரியையும் விதித்துள் ளார். சமீபத்தில் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே நடந்த தொலைப் பேசி உரையாடலுக்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யின் அளவை வரும் நாட்களில் குறைக்கும் என மோடி என்னிடம் உறுதியளித்துள்ளார் என்று டிரம்ப் பகிரங்கமாக அறிவித்தார். மேலும் இந்த ஆண்டு இறுதியில் அது பூஜ்ஜியமாக மாறும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா வுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தையில் அந்நாட்டிடம் இருந்து மர பணு மாற்றப்பட்ட மற்றும் மாற்றப்படாத விவசாய விலைப் பொருட்களை இந்தி யாவில் இறக்குமதி செய்ய அனுமதிப்ப தற்கு இந்திய அரசு முடிவெடுக்க வாய்ப்பு ள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஆசியான் மாநாட்டின் போது கையெழுத்தாகலாம் என கடந்த வாரம் சில பத்திரிகை செய்தி கள் வெளியிட்டிருந்தன. இத்தகைய சூழலில், 2 இந்தியா - அமெரிக்கா நாட்டுப் பிரதிநிதிகளின் சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே 5 சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடி வடைந்துள்ளன. தற்போது இந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதுதொடர்பாக இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், “அமெரிக்கா வுடனான பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முன்னேறி வருகிறது. இரு தரப்பினரும் பல விஷயங்களில் ஒன்றி ணைந்து வருகின்றனர். மேலும் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தா கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
