பீகாரில் “இந்தியா” கூட்டணி வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்
43 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர் 6 மற்றும் 11) 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ஆம் தேதி அன்று நடைபெறும் முதற்கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் “இந்தியா” கூட்டணியில் (மாநில அளவில் மகா கூட்டணி) இடம்பெற்று 4 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி,”பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளது. சிபிஎம் போட்டியிடும் சமஸ்திபூர் மாவட்டத் தின் விபூதிப்பூர் தொகுதி மற்றும் தர்பங்கா மாவட்டத்தின் கயாஹத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் ஞாயி றன்று நடைபெற்றன. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே, சிபிஎம் வேட்பாளர்களான சட்டமன்ற உறுப்பி னர் அஜய் குமார் (விபூதிப்பூர்), ஷியாம் பாரதி (கயாஹத்), மாநிலச் செயலாளர் லாலன் சவுத்ரி, மத்தியக் குழு உறுப்பினர் அவதேஷ் குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரபு ராஜ் நாராயண் ராவ், சஞ்சய் குமார், மாவட்டச் செயலாளர்கள் மந்து தாகூர், மனோஜ் யாதவ், ராமாஷ்ரே மஹதோ, மாநிலக்குழு உறுப்பி னர்கள் நீலம் தேவி, மனோஜ் சூனில் மற்றும் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (எம்எல்) கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பிரச்சாரக் கூட்டத்தில், நிதிஷ் குமார் தலை மையில் மற்றும் பாஜகவின் முழுக்கட்டுப் பாட்டில் இயங்கும் பீகார் மாநில அரசையும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை யும் கடுமையாகத் தாக்கி, அனைத்து விஷயங் களிலும் இந்த அரசாங்கங்கள் முற்றிலும் தோல்வி யுற்றன. 20 ஆண்டுகளாக தொடரும் “பல்டிராம் (நிதிஷ்)” அரசின் இந்த பாழடைந்த ஆட்சிக்குப் பிறகு, மகா கூட்டணி அதிகாரத்திற்கு வருவதை யும், சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை யும் உறுதி செய்வதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என கூட்டத்தில் உரையாற்றிய சிபிஎம் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
