states

கேரள உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு

கேரள உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு

471 கிராமம், 77 ஒன்றியம்,  7 மாவட்டங்கள், 3 மாநகராட்சி, 44 நகராட்சிகளில் பெண் தலைவர்கள்

கேரளத்தின் உள்ளாட்சி அமைப்பு களில் தலைவர் பதவிக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிராம  பஞ்சாயத்து, தொகுதி பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநக ராட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்கு இடஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 941 கிராம பஞ்சா யத்துகளில், 471இல் பெண்கள் தலை வர்களாக இருப்பார்கள்.  இடஒதுக்கீடு பின்வருமாறு: பெண்கள்  - பொதுப் பிரிவு 417, பட்டியல் சாதி 46,  பட்டியல் பழங்குடி 8. பொதுப் பிரிவில்  416 பேர் தலைவர்களாக இருப்பார்கள். அதே போன்று பட்டியல் சாதியைச் சேர்ந்த  92 பேரும், பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த  16 பேரும் தலைவர்களாக இருப்பார்கள். ஊராட்சி ஒன்றியம் 152 ஊராட்சி ஒன்றியங்களில், 77 பேர்  பெண்கள் தலைவர்களாக இருப்பார் கள். பெண்கள்- பொதுப் பிரிவு 67,  பட்டியல் சாதி 8, பட்டியல் பழங்குடி 2.  பொதுப் பிரிவில் 67 பேர் தலைவர் களாக இருப்பார்கள். பட்டியல் சாதியின ருக்கு 15 பேரும், பட்டியல் பழங்குடியின ருக்கு 3 பேரும் இடஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 7இல்  பெண்கள் தலைவர்களாக இருப்பார் கள், 6 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்  கள், ஒருவர் பட்டியல் சாதி பிரிவைச் சேர்ந்தவர். நகராட்சி 87 நகராட்சிகளில், 44 இல் பெண்கள் தலைவர்களாக இருப்பார்கள். பொதுப் பிரிவைச் சேர்ந்த 41 பெண்கள், பட்டியல்  சாதியைச் சேர்ந்த 3 பேர். பொதுப் பிரிவைச்  சேர்ந்த 39 பேர், பட்டியல் சாதியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பட்டியல் பழங்குடி யைச் சேர்ந்த ஒருவர் தலைவர்களாக இருப்பார்கள். மாநகராட்சி 6 மாநகராட்சிகளில், 3 பெண்கள் மேயர்  களாக இருப்பார்கள். மூன்று பேர் பொதுப்  பிரிவைச் சேர்ந்தவர்கள். ஜெய்ப்பூர்