states

img

தர்காக்களில் இந்து - முஸ்லிம் மக்கள் இணைந்து தீபாவளி கொண்டாட்டம்

லக்னோ மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் வகுப்புவாத வன் முறைகள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற ஆர்எஸ்எஸ் - பாஜகவின் அடிப்படை கொள்கையான இந்து ராஷ்டிராவுக்காக பிரதமர் மோடி, அமித் ஷா முதல் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் வரை இந்து - முஸ்லிம் மக்களிடையே வன்முறையை தூண்டி வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்து - முஸ்லிம் மக்களிடையே மோதல் சம்பவங்கள் மிக மோசமான அள வில் அதிகரித்து வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் இந்து - முஸ்லிம் மக்கள் மோதல் பூமி என்று கூறும் அளவிற்கு அங்கு பாஜகவினரால் வன்முறை சம்ப வங்கள் தூண்டி விடப்பட்டு வரு கின்றன. இத்தகைய சூழலில் உத்த ரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தர்காக்களில் இந்து - முஸ்லிம் மக்கள் இணைந்து தீபாவளி கொண்டாடிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.  பாரபங்கி உத்தரப்பிரதேசத்தின் தலை நகரான லக்னோவில் இருந்து 42 கிமீ தொலைவில் பாரபங்கிக்கு அருகே உள்ளது தேவா ஷெரீப் என்ற தர்கா. இந்த தர்கா நிர்வா கம் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு சீரியல் பல்புகளுடன் தர்காவை அலங்கரித்தும், இனிப்பு, பட்டாசு, சைவ மற்றும் அசைவ உணவுகளு டன் சிறப்பு விருந்து வைத்து இந்து - முஸ்லிம் மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. பாரபங்கி யில் மட்டுமின்றி அயோத்தி நகர பொதுமக்களும் தேவா ஷெரீப் தர்காவின் மதநல்லிணக்க தீபா வளி கொண்டாட்டத்தில் இணைந்து பங்கேற்றனர். அம்பேத்கர் நகர் பாரபங்கி தேவா ஷெரீப்  தர்காவைப் போல உத்தரப்பிர தேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள கிச்சவுச்சா ஷெரீப் தர்கா நிர்வாகமும் ஹோலி பண்டிகையைப் போலவே, தீபாவளி பண்டிகையையும் சிறப்பு ஏற்பாடுகளுடன் இந்து - முஸ்லிம் மக்களுடன் இணைந்து கொண்டாடி அசத்தியுள்ளது. தர்கா முழுவதும் தீபங்கள், பட்டாசு, இனிப்பு, சைவ மற்றும் அசைவம் என சிறப்பு உணவுகளுடன் மத நல்லிணக்கத்திற்காக   தீபாவளி பண்டிகையை  இந்து - முஸ்லிம் மக்களுடன் வெகு விமர்சியாய் கொண்டாடி மகிழ்ந்துள்ளது  கிச் சவுச்சா ஷெரீப் தர்கா நிர்வாகம். கடந்த காலங்களை விட உற்சாகம் பாரபங்கியின் தேவா ஷெரீப் மற்றும் அம்பேத்கர் நகரின் கிச்ச வுச்சா ஷெரீப் ஆகிய இரண்டு தர்காக்களிலும் கடந்த காலங்க ளில் இருந்தே தொடர்ந்து மதநல்லி ணக்கத்திற்காக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரு கிறது. ஆனால் தற்போது பாஜக வின் இந்துத்துவா அரசியலால் முன்னெப்போதும் இல்லாத வகை யில் சிறப்பு ஏற்படுகளுடன் தீபா வளி பண்டிகையை இந்து - முஸ்லிம் மக்களுடன் இணைந்து பிரம்மாண்டமாய் கொண்டாடி யுள்ளன தேவா ஷெரீப், கிச்சவுச்சா  ஷெரீப் தர்கா நிர்வாகங்கள். இந் நிகழ்வுகள் சமூகவலைத்தளங்க ளில் பலத்த பாராட்டுகளைப் பெற் றுள்ளது.