states

img

பிரிட்டனில் இந்தியப் பெண்கள் மீது தொடரும் இனவெறி பாலியல் வன்கொடுமை

பிரிட்டனில் இந்தியப் பெண்கள் மீது தொடரும் இனவெறி பாலியல் வன்கொடுமை

பிரிட்டனில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி இளம் பெண்  ஒரு வர் இனவெறி தாக்குதலுக்கு உள் ளாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தற்போது குற்ற வாளியை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சி களின் அடிப்படையில் காவல்துறை தேடு தலை துவங்கியுள்ளதாகக் கூறப்படு கிறது.  பிரிட்டனில் புலம் பெயர்ந்து வந்துள்ள பிறநாட்டு மக்களுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள தீவிர வலதுசாரிக் கும்பல்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வரு கின்றன. தற்போதைய பிரதமர் ஸ்டார் மர் இப்பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் புலம்பெயர் மக்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதி கரிக்கின்றன. குறிப்பாக இந்தியப் பெண் கள்  மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் அந்நாட்டில் ஒரு சீக்கியப் பெண், கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டார். வன்கொடுமை செய்த வெள்ளை யர்கள், “உன் நாட்டுக்குப் போ” என கூறி  அவரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்தில் மீண்டும் ஒரு இந்திய பெண் இனவெறியால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.