நிமிஷா பிரியாவின் தண்டனையில் எதுவும் செய்ய முடியாது
ஒன்றிய பாஜக அரசு கைவிரிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்டு ஏமன் சிறையில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியா வழக்கில் இனி எது வும் செய்ய முடியாது என்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு சார் பில் ஆஜரான அட்ட ர்னி ஜெனரல் வெங் கட ரமணி, இந்த விஷ யத்தில் தன்னால் முடிந்ததைச் செய்து வருவதாகவும், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதிக்கு திட்டமிடப் பட்டுள்ளது. மரண தண்டனையை நிறுத்தவும், இழப்பீடு வழங்குவதற்கான சூழலை உருவாக்கவும் இராஜதந்திர தலையீட்டைக் கோரி சேவ் நிமிஷா பிரியா நடவடிக்கை குழு மனு தாக்கல் செய்திருந்தது. மனுவை பரிசீலித்த போது அட்டர்னி ஜெனரல், ‘இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. அரசாங்கம் ஏற்கனவே அந்த வரம்பை எட்டிவிட்டது. ஏமன் மற்ற நாடுகளைப் போல் இல்லை. அரசாங்க தலையீடு சாத்தியமற்றது என்பதால், இந்த விவகாரம் இப்போது தனியார் மட்டத்தில் அணுகப்படுகிறது என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இறந்த தலால் அபு மஹ்தியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற முயற்சிகள் நடந்து வருவதாகவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஏமனில் உள்ள தனி நபர்கள் மூலம் தலால் அபு மஹ்தியின் குடும்பத்தினருடன் பேசி வருவதாகவும் ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது.