மதத்தைக் காரணம் காட்டி முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுப்பு
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜவுன்பூர் மாவட்ட மகளிர் மருத்துவ மனையில் ஒரு கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என தெரிந்ததும் மருத்துவர் அவருக்கு பிரசவம் பார்க்க மறுத்த கொடூரம் கடந்த மாதம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் கர்ப்பிணிப் பெண் கூறுகை யில், “சம்பவம் நடந்த நாளான இரவு 9:30 மணியளவில் நான் பிரசவ வலியு டன் மருத்துவமனைக்குச் சென்றேன். பணியில் இருந்த மருத்துவர் (ஆண்) நான் முஸ்லிம்களுக்கு பிரசவம் பார்க்க மாட்டேன். அதனால் உனது பிரச வத்தை நான் நடத்த மாட்டேன். இதே போல இன்னொரு முஸ்லிம் பெண்ணுக் கும் நான் பிரசவம் செய்யவில்லை எனக் கூறினார். இறுதியாக செவிலியரிடம் அந்த முஸ்லிம் பெண்ணை ஆபரே ஷன் தியேட்டருக்கு அழைத்து வந்தால் நான் வெளியே போய் விடுவேன் என்று மிரட்டினார்” என அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் மதத்தை காரணம் காட்டி முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. காங்கிரஸ், சமாஜ் வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறுகையில், “முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்த சம்பவம் பாஜக கட்சியின் பிளவுபடுத் தும் அரசியலின் விளைவு ஆகும். மருத்துவரின் இந்த நடத்தை எந்த நாகரிக சமுதாயத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது மற்றும் பணி நெறிமுறைகளுக்கு எதிரானது. ஆட்சி யில் உள்ள பாஜகவின் தொடர்ச்சியான வெறுப்புணர்வு அரசியலின் காரண மாக சமுதாயத்தில் ஏற்பட்ட ஆழமான பிளவின் விளைவு இதுவாகும். அர சாங்க இயந்திரமே சிறுபான்மையின ருக்கு எதிராக பாகுபாடு காட்டி மற்றும் குரூரமாக நடந்து கொள்ளும் போது, அது சமுதாயத்தை மேலும் பிளவு படுத்தும். உத்தரப்பிரதேசம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தினர் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு வருகிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்தார். சமாஜ்வாதி எம்.பி., அப்சல் அன்சாரி கூறுகையில், “இந்தச் சம்ப வம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஏனெ னில் மருத்துவர்கள் சமுதாயத்தில் மிகுந்த மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். நோயாளிக ளுக்கு இடையே வேறுபாடு காட்டக் கூடாது என்பதே மரபு ஆகும். இந்த விவ காரம் தொடர்பாக விசாரணை மேற் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் ணிற்கு எங்கு பிரசவம் நடந்தது, அவர் நிலைமை எப்படியுள்ளது என்பது தொடர்பாக எவ்வித தகவலும் வெளி யாகவில்லை.