கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
மலையாளிகளின் அன்பான மம்முட்டியின் 74ஆம் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். மம்முட்டி ஒரு படைப்பு மேதை. அவர் தனது வெளிப்படையான நடிப்பின் மூலம் நம் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறார். தொடர்ந்து பலதரப்பட்ட கதாபாத்திரங்களை சித்தரித்து, அதன் மூலம் திரைப்படத் துறையை முன்னோக்கி வழிநடத்த வாழ்த்துகிறேன்.
மூத்த எழுத்தாளர் சஞ்சய் ஜா
டென்னிஸ் பற்றி செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்கள் அடிக்கடி மிகவும் சலிப்பான கேள்விகளை உள்ளடக்கிய செய்திகளை வெளியிடுகின்றனர். இது விளையாட்டு வீரர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்புள்ளது. உண்மையில் சங்கடமான நிலை. தயவு செய்து இதனை தவிர்க்கலாம்.
மூத்த பத்திரிகையாளர் சுச்சீதா தலால்
மணல் கடத்தலை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா பயமின்றி தன் கடமையை செய்துள்ளார். துணிந்த அரிய அதிகாரிகளின் பக்கத்தில் நிற்பது நமது கடமை. அஞ்சனா நமக்காக தனது எதிர்காலத்தைப் பணயம் வைத்துள்ளார். அவருடன் நிற்போம்.
ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்
எஸ்எஸ்சி தேர்வு எழுத உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு போட்டித் தேர்வுத் தயாரிப்பாளர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா செல்கிறார். நிருபர் கேட்ட போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விஷயத்தில் உத்தரப்பிரதேச அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. அதனால் தான் அங்கு செல்கிறேன் எனக் கூறினார்.