states

img

மாணவர் சங்க தலைவர்கள் மீது ஆந்திர அரசு கொலைவெறித் தாக்குதல்

மாணவர் சங்க தலைவர்கள் மீது ஆந்திர அரசு கொலைவெறித் தாக்குதல்

மாணவர் சங்கங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்காத ஆந்திர பாஜக கூட்டணி அரசின் அரசாணையை  கண்டித்தும், ரூ.6400 கோடி கட்டண இழப்பீடுகளை வெளியிடுவதில் தாமதம், அரசு விடுதிகளில் உணவு விடுதி கட்டணத்தை ரூ.3000 ஆக உயர்த்துவது, மருத்துவக் கல்லூரிகளை தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயவாடாவில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் ஆந்திர காவல்துறை மாணவர் சங்க தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. 149 பேர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். காவல்துறை தாக்குதலில் மாணவர் சங்க தலைவர்கள் படுகாயமடைந்த  4 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.