கேரளம் உலகத்தின் முன்மாதிரி
நாட்டிலேயே கேரளாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் குறை வாக உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்தார். இதில் கேரளம் உலகிற்கே ஒரு முன்மாதிரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் கூறினார். மாநிலங்களவையில் ஏ.ஏ. ரஹீம் எம்.பி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் சாவித்ரி தாக்கூர் பதிலளித்தார். தேசிய சராசரி குழந்தை இறப்பு விகிதம் 1,000 குழந்தைகளு க்கு 32 ஆகும். ஆனால் கேரளாவில் சமீபத்திய எண்ணிக்கை ஆயிரத்திற்கு 8 குழந்தைகள் என்பதுதான். பாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தை இறப்பு விகிதம் மத்தியப்பிரதேசத்தில் 51, உத்தரப்பிரதேசத்தில் 43, ராஜஸ்தானில் 40, சத்தீஸ்கரில் 41, ஒடிசாவில் 39, அசாமில் 40 ஆக உள்ளது” என அவர் கூறினார். “இந்த சாதனை இடதுசாரி அரசாங்கங்க ளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் சார்பு கொள்கைகளின் தொடர்ச்சியாகும். ஒன்றிய அரசின் இந்தப் புள்ளிவிவரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஒரு சிறப்புப் பிரிவாகக் கருதும் கேரளத்தின் சுகாதார அமைப்பு, உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதைக் காட்டுகிறது” என ஏ.ஏ.ரஹீம் கூறினார்.