states

img

ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு ஜப்தி கூடாது கேரள அமைச்சரவை  அங்கீகாரம்

ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு ஜப்தி கூடாது கேரள அமைச்சரவை  அங்கீகாரம்

கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கேரள ஒற்றை வீடுள்ளோர் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி கடன் திருப்பிச் செலுத்துதல் தாமதமாகிவிட்டதாகக் கண்டறிந்த நிகழ்வுகளில், வீட்டுவசதி உரிமையை இந்த மசோதா பாதுகாக்கிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற் கும் குறைவாகவும், மொத்த கடன் தொகை ரூ.5 லட்சத்திற்கு மிகாமல், அப ராதம் மற்றும் அபராத வட்டியுடன் ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்க ளுக்கும் கடுமையான நிபந்தனைகளு டன் சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். இதுபோல் வனவிலங்கு பாதுகாப்பு திருத்த மசோதாவும் அமைச்சரவைக் கூட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மசோதா ஒன்றிய வனவிலங்கு பாது காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கானது. இந்தியாவில் ஒரு மாநிலம் ஒன்றிய சட்டத்தில் இத்தகைய திருத்தத்தைக் கொண்டு வருவது இதுவே முதல் முறை. கேரள வனச் சட்டம், 1961-ஐத் திருத்துவதற்கான கேரள வனத் திருத்த மசோதா வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தனியார் நிலத்தில் சந்தன மரங்களை வனத்துறை மூலம் விற்பனை செய்வதற்கும், அதன் விலை விவசாயிக்குக் கிடைக்கச் செய்வ தற்கும் இந்த மசோதா வகை செய்கிறது.