states

img

நீதிக்காகப் போராடுவதில் சிபிஎம் முன்னணியில் உள்ளது கர்நாடக மாநில செயலாளர் யு.பசவராஜ்

சிபிஎம் போராட்டத்தின் மகத்தான வெற்றியால் கர்நாடகாவின் மருகும்பி கிராம தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய 98 சாதி வெறி யர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொப்பல் மாவட்ட நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில், “நீதிக்காகப் போராடு வதில் சிபிஎம் முன்னணியில் உள்ளது” என கொப்பல் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநிலச் செய லாளர் யு.பசவராஜ் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”மருகும்பி தலித் மக்களுக்கு நீதி பெற்றுத் தந்த சம்பவத்தின் மூலம் சிபிஎம் மீண்டும் நீதிக்காகப் போராடுவதில் முன்னணியில் இருப்பது வெளிப்பட்டுள்ளது. இது எங்களின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என அவர் கூறினார்.