states

img

ஹரியானா பாஜக அரசின் அலட்சியமும் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற நிலையும்

ஹரியானா பாஜக அரசின் அலட்சியமும் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற நிலையும்

சண்டிகர் ஹரியானா மாநிலத்தின் தொழில் மண்டலங்க ளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் தொழிற்சாலை விபத்துக்கள் மற்றும் தொழிலாளர் உயிரிழப்புகளுக்கு மாநில பாஜக அரசின் அலட்சியமே கார ணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி மற்றும் இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) கடும் கண்ட னம் தெரிவித்துள்ளன. மேலும், தொழிலகப் பாதுகாப்பு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவதும், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்க ளுக்கு அரசு துணை போவதும் தொழிலாளர்களின் உயிரோடு விளையாடும் செயல் என்று தொ ழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடரும் விபத்துகளும் உயிரிழப்புகளும் குர்கான், பரிதாபாத் மற்றும் தார்யுஹேரா போன்ற முக்கிய தொழில் மையங்களில் உள்ள தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்கள் மற்றும் இயந்திரக் கோளாறுகளால் பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள னர். கடந்த சில மாதங்களில் மட்டும்  பத்துக்கும் மேற்பட்ட விபத்துக் கள் பதிவாகியுள்ளன. இந்த விபத் துக்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்தத் தொ ழிலாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களுக்கு உரிய இழப் பீடோ அல்லது சமூகப் பாதுகாப் போ வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விபத்துக்கள் குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சுரேந்தர் சிங் கூறுகையில், ”தொ ழிற்சாலைகளில் ஆய்வு நடத்த வேண்டிய அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறிவிட்ட னர். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றித் தொழிலாளர்கள் ஆபத் தான சூழலில் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்” என அவர் குற்றம்சாட்டினார். பாதுகாப்பு விதிகள் மீறலும் அரசின் போக்கும் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு கள், தொழிற்சாலை ஆய்வாளர்க ளின் அதிகாரத்தைக் குறைத்துள் ளன. இது நிறுவனங்கள் தன்னிச்சை யாகச் செயல்படவும், பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிக்கவும் வழி வகுத்துள்ளது. தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது ஒரு செலவாக மட்டுமே பார்க்கப்படுவதால், பல நிறுவனங்கள் முறையான தீய ணைப்பு வசதிகளையோ அல்லது அவசரகால வெளியேற்ற வழிக ளையோ பராமரிப்பதில்லை. உயிரிழந்த குடும்பங்களுக்கான கோரிக்கைகள் விபத்துக்களில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களு க்குத் தலா 50 லட்சம் ரூபாய் இழப் பீடு வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்குத் தர மான மருத்துவ சிகிச்சையும் வாழ்வாதார உதவியும் அளிக்க வேண்டும் என்றும் சிபிஎம் கோ ரிக்கை விடுத்துள்ளது. மேலும், விபத்துக்களுக்குக் காரணமான நிறுவன உரிமையாளர்கள் மீது  கடுமையான கிரிமினல் நடவடிக் கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் தழுவிய போராட்டம் அதே போல மாநிலம் தழுவிய அளவில் தொழிலாளர்களைத் திரட்டி, பாதுகாப்பு உரிமைக ளுக்காகப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகச் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது சலுகையல்ல, அது அவர்க ளின் அடிப்படை உரிமை என்பதை  அரசு உணர வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கை யாக உள்ளது. (லெப்ட் வியூஸ்)