சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
பீகாரைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அடுத்த முன்னுரிமை மாநிலமாக கேரளா இருப்பதாகத் தெரிகிறது. திருச்சூரில் பாஜகவின் ஒரே வெற்றி (சுரேஷ் கோபி) வாக்காளர் பட்டியல் கையாடலின் விளைவு என்பதற்கான ஆதாரங்கள் வெளிவருவதால், கேரளா ஒருபோதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை வரவேற்காது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
அதிகாலை 4 மணிக்கு எழுந்து வெறும் 36 நொடிகளில் 2 வாக்காளர்களை நீக்கிவிட்டு பிறகு மீண்டும் தூங்கச் செல்கிறார்கள். வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது. தேர்தல்களைக் கண்காணிக்கும் அதிகாரி விழித்திருந்து இந்த திருட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். திருடர்களையும் பாதுகாக்கிறார்.
ஊடகவியலாளர் கிருஷ்ண காந்த்
ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், தில்லி என வரிசையாக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் ஆதாரங்களுடன் அம்பலமாகிக் கொண்டே வருகிறது. ஆனால் நீதிமன்றம் வாக்கு திருட்டு பற்றி ஒன்றும் பேசாமல், தெருநாய்கள் பிரச்சனையை பிரதானமாக எடுத்து விசாரித்தது. ஏன் எந்த நீதிபதிக்கும் வாக்கு திருட்டு, ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை?
பிளாக்பக் சிஐஓ ராஜேஷ் யாபாஜி
பெங்களூரு சாலை பள்ளத்தால் ஊழியர்கள் கஷ்டப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலால் தினமும் அலுவலகத்திற்கு வரவே 1.5 மணி நேரம் ஆகிறது. அதனால் எங்கள் நிறுவனம் நகரை விட்டு வெளியேறுகிறது. பெங்களூரு மட்டுமல்ல, நாட்டின் பெரும்பாலான நகரங்கள் இவ்வாறு நெரிசலில் பொழுதை கழிக்கிறது.