states

ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலை வரும், முன்னாள் அமைச்சரு மான சவுரப் பரத்வாஜ் வீடு  உள்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அன்று சோதனை நடத்தினர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மருத்துவமனை கட்டு மானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் ரீதியாக சட்டவிரோத பணப்  பரிமாற்றம் நடந்ததால் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் 13 இடங்களில் நடைபெற்றா லும், அதில் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை மாலை வரை எந்தத் தகவலும் இல்லை.