பீகாரில் வாக்காளர்களை நீக்கச் சொல்லி தேர்தல் ஆணையம் நெருக்கடி
மாரடைப்பால் அதிகாரி உயிரிழப்பு
பாட்னா பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதால் பாஜக தேர்தல் ஆணை யத்துடன் கள்ளக் கூட்டணி அமைத்து வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் எதிர்க் கட்சி ஆதரவாளர்கள், தலித் மற்றும் பழங்கு டியினர், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையி னர் என 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி யுள்ளது. மேலும்பல லட்சம் வாக்குகளை முறை கேடாக தேர்தல்ஆணையம் சேர்த்துள்ளது. இந்நிலையில், வாக்காளர்களை நீக்கச் சொல்லி தேர்தல் ஆணையம் அளித்த நெருக்கடி காரணமாக, தேர்தல் அதிகாரியான பள்ளி தலைமை ஆசிரியர் மாரடைப்பால் உயிரி ழந்தார். பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தின் அர்ரா வின் மௌலாபாக்கில் அமைந்துள்ள எஸ்பி பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் ராஜேந்திர பிரசாத். வயது 59 ஆகும். இவர் போஜ்பூர் மாவட்ட பூத் நிலை அதிகாரியாக (BLO) உள்ளார். இத்தகைய சூழலில் உயர் அதி காரிகளால் தொடர்ந்து வாக்காளர்களை நீக்க, சேர்க்க அளித்த நெருக்கடி காரணமாக மற்றும் அழுத்தம், பணிச்சுமை ஆகியவற்றால் ஆகஸ்ட் 27 அன்று மாரடைப்பால் ராஜேந்திர பிரசாத் உயிரிழந்தார். இதுதொடர்பாக ராஜேந்திர பிரசாத்தின் 28 வயது மகன் ஆஷிஷ் ராஜ் அழுது கொண்டே “தி வயர்” செய்தியாளரிடம் கூறுகையில், “தனது தந்தைக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து அடிக்கடி அழைப்புகள் வந்தன. அவர் தொகு திக்கு வந்து தனது பணி குறித்து விளக்கம் அளிக்குமாறு காலம், நேரம் பாராமல் அடிக்கடி கேட்டுக் கொள்ளப்பட்டார். அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாக அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. இதனால் எனது தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார்” என அவர் கூறினார். மேலும் பிரசாத்தின் மகள், தீப்ஷிகா (26) கூறுகையில்,“நான் அப்பாவை அவரது பள்ளியில் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது யாரோ அவருக்கு தொலைபேசி யில் அழைத்தனர். 5 நிமிடங்களுக்குள் அலுவ லகத்திற்கு வரவில்லை என்றால், பணிநீக்கம் செய்யப்படுவீர் என மிரட்டினார்கள். அப்பா தான் வேலை செய்து வருவதாகவும், ஏன் அப்படிப் பேசுகிறார்கள்? என்றும் கேட்டார். அந்த அழைப்பிற்குப் பிறகு, அப்பா மிகவும் பயந்துவிட்டார். அன்று முதல் அவர் அமைதியாக இருக்கத் தொடங்கினார். இறுதி யில் அவர் எங்களை விட்டுச் சென்று விட்டார்” என அவர் அழுதுகொண்டே கூறினார். இந்த சம்பவம் நிகழ்ந்து 2 வார காலம் ஆன பின்பு “தி வயர்” இணைய செய்தித் தளம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக ராஜேந்திர பிரசாத் இந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று ஓய்வு பெறவிருந்தார். ஓய்வு பெற 4 மாதங்களே உள்ள நிலையில், வாக்காளர்களை நீக்கச் சொல்லி தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகளின் மிரட்டலால் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.