அரசியல் போட்டிக்கான தளமாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்
பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
புதுதில்லி கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் “400 இடங்களை வெல்வோம் ; அரசியலமைப்பை மாற்றுவோம்” என பாஜக பிரச்சாரம் மேற் கொண்டது. பாஜகவின் இந்த பிரச் சாரத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “பாஜக 400 இடங்களை வென்றால் தலித், பழங்குடி, ஓபிசி இடஒதுக்கீடு களை அடியோடு ஒழிக்கும்” என கூறினார். ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு எதிராக தெலுங்கானா பாஜக மாநில பொதுச் செயலாளர் கரம் வெங்கடேஷ்வரலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை எதிர்த்து ரேவந்த் ரெட்டி தெலுங் கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே. லட்சுமணன், “அவதூறு கருத்துகள் தேசிய பாஜக கட்சிக்கு எதிராக தெரி விக்கப்பட்டன. ஆனால் வெங்கடேஷ் வரலு தனது தனிப்பட்ட முறையில் புகார் தாக்கல் செய்துள்ளார். இது முரண்பாடானது” எனக் கூறி வழக் கை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார். தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வெங்கடேஷ்வரலு உச்சநீதிமன்றத் தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு திங்களன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர்.கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் அதுல் எஸ்.சந்துர்கர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வாதம் செய்ய வேண்டாம் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதத்தை தொடங்கும் முன்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,”இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் தயாராக இல்லை” எனக் கூறினார். ஆனால் வழக்கறிஞர் ரஞ்சித் குமார், “வாதத்தை கேளுங்கள்” என வலி யுறுத்தினார். இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடும் அதிருப்தியை வெளிப் படுத்தி, “அரசியல் போட்டிக் கான தளமாக நீதிமன்றத்தை பயன் படுத்தக் கூடாது. இதனை பல முறை தெரிவித்தும் தொடர்ச்சியாக இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டுமானால் எதையும் தாங்கும் தன்மை வேண்டும்” என்று தெரிவித்த தலைமை நீதிபதி பி. ஆர்.கவாய் இம்மனுவை தள்ளு படி செய்து உத்தரவிட்டார்.