states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி

மக்களின் வாக்குரிமையை மதிப்பிழக்கச் செய்யும் எவ்வித முயற்சியையும் ஜனநாய கத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. முழு வெளிப் படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். இம்முறைகேடுகள் குறித்து சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொண்டு, தேர்தல் மீதான நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டும்.

பிரபல யூடியூபர் துருவ் ரதி

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வது மிகவும் எளிது. ஆனால் கையும் களவுமாக பிடிபடும் வாய்ப்பும் மிக குறைவு. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு பின் இருக்கும் திட்டம் என்னவென இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யார் அவர்கள் (தேர்தல் ஆணையம்) நோட்டீஸ் தருவதற்கு? தேர்தலை நேர்மையாக எதிர்கொண்டு ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள எங்களுக்கு (எதிர்க்கட்சிகள்) நோட்டீஸ் அளிக்க உரிமை உண்டு. ஜனநாயக நாட்டில், தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும்.

ஊடகவியலாளர் அர்பா ஷெர்வானி

இந்திய தேர்தல் ஆணையம், மக்களின் மத்தியில் தனது நம்பகத்தன்மையை முற்றாக இழந்து விட்டது. மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட அமைப்பு, நியாயமான முறையில் தேர்தல் நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு ஒரே வழி, தேர்தல் ஆணையம் கலைக்கப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட முடியாத நடுநிலை கொண்டவர்களை கொண்டு ஓர் அமைப்பை கட்டமைப்பதுதான்.