தில்லி காவல்துறை அடாவடி பெண் எம்.பி., மயக்கம்
தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்ற “இந்தியா” கூட்டணி எம்.பி .,க்களை வலுக்கட்டாய மாக தடுத்து நிறுத்தி கைது செய்தது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை. இந்த கைது நட வடிக்கையின் போது திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.,யான மிதாலி பாக் மயக்கமடைந்தார். இதனை மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கி ரஸ் காங்கிரஸ் எம்.பி., சயானி கோஷ் உள்ளிட்டோர் தாங்கிப் பிடித்து, தண்ணீர் அளித்தும் முதலுதவி அளித்தனர். பின்னர் அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.