வேலை இல்லாமல் சம்பளம் பெற்றனரா? மாணவர் சேர்க்கை இல்லாத 7,993 பள்ளிகளில் பணியாற்றும் 20,817 ஆசிரியர்கள்
ஒன்றிய கல்வி அமைச்சகம் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளியின் ஆசிரியர் விபரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழு வதும் சுமார் 7,993 அரசு பள்ளி களில் ஒரு மாணவர் சேர்க்கைகூட நடைபெறவில்லை. அதே போல ஒரு மாணவர் கூட சேராத இந்த 7,993 பள்ளிகளில் சுமார் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். மேற்குவங்கம் அவர்களில் 17,965 ஆசிரியர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் பணி புரிந்து வருகின்றனர். அதே போல தேசிய அளவில் மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகளின் எண்ணிக்கையிலும், மேற்குவங்கம் 3,812 பள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாத மாநிலங்களில் 2,245 பள்ளி களுடன் (1,106 ஆசிரியர்கள்) தெலுங்கானா இரண்டாம் இடத்தில் உள்ளது. மத்தியப்பிரதேசம் 463 பள்ளிகளுடன் (223 ஆசிரியர்கள்) மூன்றாம் இடத்தில் உள்ளது. உத்த ரப்பிரதேசத்தில் 81 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வில்லை. ஆனால் அம்மாநில பள்ளி களில் ஆசிரியர் இருப்பு தொடர்பாக திடமான தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே ஒரு ஆசிரி யர் மட்டுமே பணியில் உள்ள சுமார் ஒரு லட்சம் பள்ளிகளில் சுமார் 33 லட்சம் மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதில் ஆந்திரா முத லிடம் வகிக்கிறது. உத்தரப்பிர தேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதிர்ச்சி... ஒரு ஆசிரியர் உள்ள பள்ளி, சேர்க்கை இல்லாத பள்ளி என்ற தக வல்கள் வழக்கமானது தான். ஆனால் 2024-25 கல்வியாண்டில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 7,993 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என்றாலும், 20,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. ஆனால் 7,993 பள்ளிகளில் புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லையா? அங்கு பழைய சேர்க்கையில் மாணவர்கள் படித்தனரா? சேர்க்கை இல்லாமல் மாணவர்களே இல்லா மல் இருந்தால் அந்த பள்ளி எப்படி இருக்கும்? பிறகு எப்படி ஆசிரி யர்கள் ஊதியம் பெற்று இருந்த னர்? புதிய சேர்க்கை இல்லாமல் வழக்கமான மற்ற வகுப்பு மாண வர்களுக்கு பாடம் நடத்தினரா? என பல்வேறு சர்ச்சைக் கேள்விகள் கிளம்பின.
