ஆட்சித் தொடர்ச்சியால் சாத்தியமான வளர்ச்சி முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு
கேரளாவில் இன்று காணப் படும் வளர்ச்சி ஆட்சி தொ டர்ச்சியினால் உருவாக்கப் பட்டவை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். 2016 ஆம் ஆண்டு எல்.டி.எப் ஆட்சிக்கு வந்தபோது ஒவ் வொரு துறையிலும் இருந்த நிலைமை என்ன, இன்று அது எப்படி உள்ளது என்பதை ஆராயும்போதுதான் இந்த மாற்றத்தைக் காண முடியும் என்று அவர் கூறினார். கேரள தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் மாநில பொது மாநாடு அக்.14 செவ்வாயன்று சங்கத் தலைவர் நிஷா ஜாஸ்மின் தலைமையில் நடை பெற்றது. இதனைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் மேலும் கூறியதாவது: தொடர் ஆட்சி மாநிலத்திற்கும் மக்க ளுக்கும் பயனளித்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் பெரிய அளவிலான முன் னேற்றத்தைக் காணலாம். இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) ஆட்சி க்கு வந்த ஒவ்வொரு கட்டத்திலும், நாட்டை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பின்னர், யு.டி.எப் ஆட்சி க்கு வந்தபோது, அதற்கு நேர்மாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எல்.டி.எப் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் நாசப் படுத்தப்பட்டன. அதனால்தான் 2021 இல் ஆட்சித் தொடர்ச்சி என்கிற மாற்றம் ஏற்பட்டது.