பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு: 1000 சுற்றுலா பயணிகள் தவிப்பு
டார்ஜிலிங் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதி மலை வாசஸ்தலமான டார்ஜி லிங்கில் சனிக்கிழமை இரவு இடை விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. ஒரே இரவில் 300 மி.மீ.,க்கும் அதிகமான அளவில் கனமழை பெய்ததால் டார்ஜிலிங் நகரம் மற்றும் சுற்றுவட்டார மலைக் கிராமங்கள் வெள்ளக் காடாய்க் காட்சி அளித்தன. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக், சுகியாபோக்ரி, ஜோர்பங்லோ, ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள நக்ரகாட்டா (டார்ஜிலிங் எல்லை) ஆகி யவை மிக மோசமான அளவில் பாதிக்கப் பட்டுள்ளன. டார்ஜிலிங் மாவட்டம் முழுவதும் நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக அதிக ரித்துள்ளது. பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. இத்தகைய சூழலில், உயிரிழந்த குடும்பங்க ளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். நிலச்சரிவு காரணமாக டார்ஜிலிங்கில் இருந்து சிக்கிம் செல்லும் முக்கிய சாலைக ளில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் நவராத்திரி விடு முறையை கொண்டாட டார்ஜிலிங் சென்ற 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், தற்போது அங்கேயே சிக்கித் தவித்து வருகின்ற னர். உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, பேரிடர் மீட்புக் குழுக்களால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக டார்ஜிலிங் துணைப்பிரிவு அதிகாரி (SDO) ரிச்சர்ட் லெப்சா தெரிவித்துள்ளார். மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட பகுதிகளில் ஒன்றான மிரிக் ஏரிப் பகுதி யில் மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) இணைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டார்ஜிலிங் பேரழிவை இயற்கைப் பேரிடர் என்று அறிவிக்க வேண்டும் சிபிஎம் வேண்டுகோள்
டார்ஜிலிங் பேரழிவை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டார்ஜிலிங் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”கனமழை மற்றும் நிலச்சரிவால் டார்ஜிலிங் மலைப்பகுதி முழுவதும் மிக மோசமான அளவில் சேதமடைந்துள்ளது. விலைமதிப்பற்ற உயிர்களையும், வீடு, வாகனம் உள்ளிட்ட சொத்துக்களையும் மக்கள் இழந்து தவிக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். மலைப் பகுதிகள் மட்டுமின்றி சமவெளிப் பகுதிகளும் கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த துன்பம் மிகுந்த நேரத்தில் டார்ஜிலிங் மக்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். குறிப்பாக சனிக்கிழமை இரவு முதல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சோர்வடையாமல் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம். மிக முக்கியமாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் டார்ஜிலிங் பேரழிவை உடனடியாக இயற்கைப் பேரிடர் என்று அறிவிக்க வேண்டும். அதே போல துரிதமாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்கள்/குடும்பங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்” என சிபிஎம் டார்ஜிலிங் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.