states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய அம்சம் ஆகும். இதற்காக ஆர்ஜேடி தலைமையிலான இந்தியா கூட்டணி வெல்வதை உறுதி செய்ய வேண்டும். பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த சட்டத்திற்கு எதிராக, சிபிஎம் கட்சி ஆகஸ்ட் 8ஆம் தேதி அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த உள்ளது.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகரால் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், வெளிநாட்டு குடியுரிமை இல்லாதவர்கள் ஆகியோரின் பெயர்களை நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த முடிவுகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பது குறித்து தெளிவான விளக்கங்களை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. அதனால் தான் சந்தேகம் வலுக்கிறது.

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீர் ஒரு கடினமான காலத்தை கடந்து வருகிறது. மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகின்றன. அடிக்கடி சோதனைகள் நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கானோர் சிறையில் உள்ளனர். இந்த நிலைமை எப்போது மாறும்.

சிபிஎம் எம்.பி.,  ஜான் பிரிட்டாஸ்

சிறையில் அடைக்கப்பட்ட அரசியலமைப்பிற்காக (கன்னியாஸ்திரிகள்) குரல் எழுப்புவது தாராள மனப்பான்மை அல்ல, பொறுப்பு. அரசியலமைப்பின் மீது சத்தியம் செய்து கொண்ட ஒருவருக்கு, அந்தப் பொறுப்பு 10 மடங்கு அதிகம். ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடுவது கருணை அல்ல, அது கடமை.