பாஜக ஆளும் ராஜஸ்தானில் பசுக்குண்டர்கள் அட்டூழியம் 32 வயது முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை
போபால் பாஜக ஆளும் மத்தியப்பிரதே சத்தின் முல்தான்பரைச் சேர்ந்த வர் ஷேரு சுசாதியா (32). முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரான இவர் தனது 9 குடும்ப உறுப்பினர்களுடன் விவசா யம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தனது விவசாய நிலத்தி ற்கு கால்நடைகள் வாங்க தனது நண்பர் மொஹ்சினுடன் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானுக்குச் சென்றார். செப்டம்பர் 16 அன்று ராஜஸ்தானின் பில்வா ராவில் பசுக்காவலர்கள் என கூறிக் கொள் ளும் இந்துத்துவா குண்டர்கள்,”பசுவைக் கடத்திச் செல்கிறீர்களா?” என்று கூறி வாக னத்தை தடுத்து நிறுத்தி ஷேரு சுசாதியா, மொஹ்சின் மீது மரக்கட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். வாகன ஓட்டு நர் இந்துத்துவா குண்டர்கள் வழி மறித்த போதே தப்பி ஓடிவிட்டார். அதே போல தாக்கு தல் நடந்த சிறிது நேரத்திலேயே மொஹ்சினும் தப்பிவிட்டார். ஆனால் ஷேரு சுசாதியா தப்ப முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இந்த சம்பவம் நிகழ்ந்து 16 நாட்களுக்குப் பின்னர் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள் ளது. பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊடகங்கள் மூடி மறைக்க, “தி” வயர் செய்தி நிறுவனம் இந்துத்துவா குண்டர்களின் அட்டூழியத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ரூ. 50,000 இந்துத்துவா குண்டர்களின் தாக்குதலில் உயிர்பிழைத்த மொஹ்சின் “தி” வயர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,”9க்கும் மேற்பட்டோர் வாகனத்தை மறைத்து எங்கள் பெயர்களைக் கேட்டார்கள். நாங்கள் முஸ்லிம்கள் என்று தெரிந்தவுடன் எங்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினர். கால்நடைகள் விவ சாயத்திற்காக சட்டப்பூர்வமாக வாங்கப் பட்டதை நிரூபிக்கும் ரசீது எங்களிடம் இருந் தது. ஆனால் அந்தக் கும்பல் அதைக் கிழித்து மரக்கட்டைகளால் தாக்கி, பணத்தைக் கொள் ளையடித்துச் சென்றது. மேலும் ஷேருவின் குடும்பத்தினரிடம் போன் செய்து உயிரைக் காப்பாற்ற ரூ. 50,000 கேட்டது” என அவர் கூறினார். பணம் பறிப்பதே முக்கிய குறிக்கோள் பசுக்காவலர்கள் என்று கூறி சுற்றித் திரி யும் இந்துத்துவா குண்டர்களின் முக்கிய வேலை பசுக் கடத்தலை தடுப்பது அல்ல. பணம் பறிப்பது தான். பணம் பறிப்பது வெளி யில் தெரியக் கூடாது என்பதற்காக கால்நடை களை கொண்டு செல்பவர்களை அடித்துக் கொல்கிறது. இது கடந்த காலங்களிலும் கூறப்பட்டாலும், தற்போது மொஹ்சின் மூல மாக உறுதியாகியுள்ளது. மேலும் குடும்பத்தி னரிடம் பணம் பறிப்பதும் அம்பலமாகி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.