states

பூஜை அறையில் கஞ்சா, மெத்தாம்பேட்டமைன்

பூஜை அறையில் கஞ்சா, மெத்தாம்பேட்டமைன்

கண்ணூரில் பாஜக  பிரமுகர் தப்பி ஓட்டம்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்  டம் திருவங்காட்டில் என்.எம். ரணில் என்ற பாஜக நிர்வாகி யின் வீட்டில் கஞ்சா, டையாக்ஸி மெத்  தாம்பேட்டமைன் (எம்டிஎம்ஏ) போதைப் பொருட்களை காவல்துறையினர் சனிக் கிழமை அன்று பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் தலசேரி காவல் ஆய்வாளர் பி.ஏ.பினு  மோகன் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியள வில் சோதனை நடத்திய போது, பூஜை அறையில் ஒரு பை மற்றும் உறையில் 1.25 கிலோ கஞ்சா மற்றும் 5.9 கிராம் டையாக்ஸி மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருட்களை கண்டுபிடித்தனர். கஞ்சா புகைக்க பயன்படுத்திய காகி தங்கள் மற்றும் அளவிட பயன்படுத்தப் பட்ட தராசு ஆகியவை மீட்கப்பட்டன. கஞ்சா விற்கும் கும்பலின் தலைவர் ரணில் என்று காவல்துறையினர் தெரி வித்தனர். அவரைத் தேடி பலரும் வருகி றார்கள் என்றும் அவர் தொடர்ந்து  போதைப்பொருள் பயன்படுத்துவதாக வும் அவரது சகோதரர் காவல்துறை யிடம் வாக்குமூலம் அளித்தார். சோத னைக்கு முன் காவல்துறையினரின் கண்ட தும் ரணில் தப்பி ஓடிவிட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை யை தீவிரப்படுத்தி, ரணிலையும் காவல்  துறையினர் தேடி வருகின்றனர்.