ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தலிலும் பாஜக வாக்குத் திருட்டு
கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரில் 4 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் “இந்தியா” கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி 3 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பாஜக வெற்றி பெற போதுமான இடங்கள் இல்லை என்றா லும், அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநி லங்களவை தேர்தலிலும் பாஜக வாக்குத் திருட்டு மூலமாகவே வெற்றி பெற்றது என அப்பகுதி துணை முதலமைச்சர் சுரீந்தர் சவுத்ரி (தேசிய மாநாட்டுக் கட்சி) குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,“ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடத்தை கைப்பற்ற பாஜக வாக்கு திருட்டு மற்றும் குதிரை பேரத்தில் ஈடு பட்டது. இதனை நாங்கள் முன்பே கணித்தது தான். குதிரை பேரம் மூலம் அனைத்து மாநிலங்களவை இடங்க ளையும் வெல்ல பாஜக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. இருப்பினும் விரும்பியபடி வெற்றிபெற முடிய வில்லை, ஒரே ஒரு இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. நான்காவது இடத்தில் பாஜகவின் வெற்றி சட்டவிரோதமானது தான். பாஜகவுக்கு குறுக்கு வாக்களித்த எம்எல்ஏக்களை அடையாளம் காண கட்சி உள் விசாரணை நடத்தும். கூட்ட ணியில் இருந்து கொண்டு பாஜகவுக்கு வாக்களித்தவர்கள் யாரும் தப்ப முடியாது” என அவர் கூறினார்.
