states

img

அனில் அம்பானிக்குச் சிக்கல்

அனில் அம்பானிக்குச் சிக்கல்

பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானிக்குச் சொந்த மான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் டெலிகாம், ரிலை யன்ஸ் இன்ப்ராடெக் ஆகிய நிறுவ னங்கள் வங்கிகளிடம் பெற்ற கடன்க ளைத் திருப்பிச் செலுத்தவில்லை. இத னைத் தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் ஆப்  இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா  மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்றவை அனில் அம்பானியின் நிறு வனக் கணக்குகளை மோசடியானவை (ரூ.14,000 கோடி முதல் ரூ17,000 கோடி வரை) என வகைப்படுத்தின. வங்கிகளின் இந்த முடிவை எதிர்த்து  அனில் அம்பானி மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தங்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு  வழங்கப்படாமல், ஒருதலைப்பட்சமாக “மோசடி” என்று முத்திரை குத்தப்பட்ட தாக அனில் அம்பானி தரப்பில் வாதி டப்பட்டது. 2021ஆம் ஆண்டு, உயர்நீதி மன்றம் வங்கிகளின் இந்த நடவடிக்கை க்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில், அனில் அம்பானி வழக்கு திங்களன்று மும்பை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவுதம் படேல், நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு, அனில் அம்பானிக்கு வழங்கப் பட்டிருந்த இடைக்காலத் தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. தடை நீக்கப் பட்டுள்ளதால், வங்கிகள் இனி சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றி அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது உரிய விசாரணை மற்றும் நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.