states

img

பெங்களூருவில் அமேசான் நிறுவனம் 7,000 பேருக்கு வேலை?

பெங்களூருவில் அமேசான் நிறுவனம் 7,000 பேருக்கு வேலை?

அமெரிக்க பன்னாட்டு இணைய வணிக நிறுவனமான அமேசான், கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் தனது புதிய வணிக வளாகத்தை (அனைத்தையும் உள்ளடக்கியது) திங்களன்று திறந்தது. கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் இந்த வளாகம் அமைந்துள்ளது. 5 ஏக்கர் நிலப்பரப்பில், 12 தளங்களுடன் 1.1 மில்லியன் சதுர அடி பரப்பளவில் இந்த வளாகம் விரிந்துள் ளது. இங்கு 7,000-க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் தங்கிப் பணியாற்ற முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளி யாகும் என்றும் கூறப்படுகிறது. ஆசியா விலேயே அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய  வணிக வளாகம் ஹைதரா பாத்தில் (நாணக்ராம்குடா) உள்ளது. பெங்களூருவில் திறக்கப்பட்டது ஆசி யாவின் இரண்டாவது மிகப்பெரிய வணிக வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது.