பெங்களூரு:
மத்திய - மாநில அரசுத் துறைகளில் வேலைவாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட - ஆர்எஸ்எஸ் நிர்வாகி என்றுகூறப்படும் நபரை, போலீசார் கைதுசெய்துள்ளனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரு நாகர்பாவியைச் சேர்ந்தவர்யுவராஜ் சுவாமி (52). ஜோதிடம்,ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆர்எஸ்எஸ் - பாஜகவோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர் என்று கூறப்படும் இவர், விஜயநகரைச் சேர்ந்தஒருவருக்கு மத்திய அரசில் வேலைவாங்கித் தருவதாக கூறி, ரூ. 1 கோடியே 80 லட்சத்தை மோசடி செய்து விட்டார் என்று கடந்த டிசம்பரில் குற்றச்சாட்டு எழுந்தது. போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த 62 வயது பெண் உட்பட பலரிடமும்யுவராஜ் சுவாமி கோடிக்கணக்கில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதில், ரூ. 8 கோடியே 30 லட்சத்தைப் பறிகொடுத்த மல்லேஸ்வரம் பெண், தனது புகாரில் கூறியிருப்பதாவது:
“என்னிடம் ரூ. 8.3 கோடியை மோசடி செய்த யுவராஜ் சுவாமி தன்னை ஆர்எஸ்எஸ் நிர்வாகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுதான் பழக்கமானார். ஜோதிடப்படிஅரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மத்திய அரசில் முக்கிய பொறுப்புக்கு வரவும் வாய்ப்புஇருக்கிறது என்று என்னிடம் ஆசைகாட்டி ரூ. 3 கோடியே 80 லட்சம் பணம் வாங்கினார். எனக்கு சொந்தமான நிலம், அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை விற்று அவருக்கு அந்தப் பணத்தை கொடுத்தேன். என்னை தில்லிக்குஅழைத்துச் சென்று பாஜக மூத்தத்தலைவர்களையும் சந்திக்க வைத் தார். ஆனால் எதிர்பார்த்ததை போல எனக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. மாறாக, யுவராஜ் சுவாமி என்னிடம் மேலும் 5 கோடி ரூபாய் பணம் கேட்டார். என்னிடம் பணம் இல்லாத நிலையில், என் பெயரைச் சொல்லி என்உறவினர்களிடம் 4 கோடியே 50கோடி பணம் வாங்கினார். பின்னாளில் அவர் ஏமாற்றுவதை அறிந்து, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, கூலிப்படை வைத்து என்னைக் கொன்று விடுவதாகவும் மிரட்டினார்; அவருடன் இருந்த ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளரும் புகார் அளிக்கக் கூடாது என அச்சுறுத்தினார்” என்றுதெரிவித்துள்ளார்.
இதனிடையே யுவராஜ் வீட்டில்இருந்து ரூ. 2.1 கோடி ரொக்கப்பணம், ரூ. 1.7 கோடி மதிப்பிலான 3 சொகுசுக் கார்கள், ரூ. 91கோடி மதிப்பிலான 100 கசோலைகள், 26 இடங்களில் வாங்கப்பட்ட பல கோடி மதிப்பிலான சொத்துஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்