பெங்களூரு, அக். 13- கவுரி லங்கேஷ் கொலையாளி களுக்கு மாலை அணிவித்து இந்துத்துவா குண்டர்கள் வரவேற்பு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் இந்துத்துவா கருத்து களை விமர்சித்ததற்காக பத்திரிகை யாளரும், பிரபல எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் இந்துத்துவா குண்டர்களால் கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த 2017 செப்டம்பர் 5 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக 17 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்த நிலையில், 10 ஆயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்ற வாளிகளில் ஒருவரான மோகன் நாயக்கிற்கு கர்நாடக உயர்நீதி மன்றம் கடந்த 2023 டிசம்பர் மாதம் ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து பலர் ஜாமீனில் விடுதலை ஆகி வரும் நிலை யில், கடந்த அக்டோபர் 9 அன்று மேலும் 2 பேர் நீதிமன்ற ஜாமீன் மூலம் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்து விடுதலையாகி விஜயபுரா வந்த கொலையாளிகள் 2 பேருக்கும் காவி சால்வை போர்த்தி பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ள னர் இந்துத்துவா குண்டர்கள்.
பின்னர் கொலையாளிகள் 2 பேரும் சிவாஜி சிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாலை அணிவிக்கச் செய்து, கோவில்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
கவுரி லங்கேஷ் கொலையாளி களுக்கு இந்துத்துவா குண்டர்கள் அளித்த இந்த வரவேற்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வ லர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கவுரி லங்கேஷ் கொலையாளி நவீன் குமாரின் தோளில் கைபோட்டு பாஜக முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா பேசும் படம் ஒன்றை கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.