கவுகாத்தி
சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருகிறது. மாநிலத்தின் மற்ற பகுதியை காட்டிலும் கச்சர் மாவட்டத்தில் கனமழையில் ஊற்றி வருகிறது. இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சோனாய் நகர பகுதியில் உள்ள திலகிராமில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. இதில் தாய் (35 வயது), மகன் (8 வயது), மகள் (2 மாத கைக்குழந்தை) உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த மூன்று நபர்கள் காயமடைந்து சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.