ஹைதராபாத்:
ராம்கி குழுமத்தின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான ராமி ரெட்டி, தனது நிறுவனங்கள் லாபம் இன்றி நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி போலி ஆவணங்கள் மூலம் ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு நஷ்டக் கணக்குகாட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.மேலும் இந்தக் குழுமம் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் பங்குகளை வாங்கி அதிக வருவாய் ஈட்டியதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல்கிடைத்தது. இதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஜூலை 6 அன்று 15 இடங்களில் சோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களின் படி ராமி ரெட்டி 300கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு வருமான வரித்துறைநோட்டீஸ் அனுப்பியுள்ளது.