சித்தூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பதியில் இருந்து திருச்சிக்கு பக்தர்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பேருந்து, ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் கங்கவரம் அருகே லாரி மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.