states

img

‘குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை’

ஹரியானாவில் கடந்த  2019இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் நடை பெற்றது. மொத்தமுள்ள 90 தொகு திகளில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், ஜன நாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) 10  இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம், ஹரியானா லோகித் (எச்எல்பி) ஆகிய கட்சிகள் தலா  ஒரு இடங்களிலும், 6 இடங்களில்  சுயேச்சைகளும் வெற்றி பெற்ற னர். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜேஜேபி கட்சித்  தலைவர் துஷ்யந்த் சவுதாலா வுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியும், 4 சுயேச்சை எம்எல்ஏக்  கள் ஆதரவுடன் பாஜக சார்பில் முதல்வராக மனோகர்லால் கட்டார் பதவியேற்றார். 

ஆனால் ஹரியானா பாஜக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்  வதற்குள் சீட் பிரச்சனையால் அர சுக்கு அளித்த ஆதரவை ஜேஜேபி  கட்சி வாபஸ் பெற்ற நிலையில் கடந்த மார்ச் மாதம் கவிழ்ந்தது. ஹரியானா முதல்வர் மனோ கர்லால் கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலை யில், 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் எச்எல்பி கட்சியின் எம்எல்ஏ ஆதரவுடன் மீண்டும் பெரும் பான்மை பெற்ற (46 இடங்கள்) பாஜக, முதல்வர் மனோகர் லால்  கட்டாரை நீக்கி, புதிய முதல்வராக நயாப் சிங் சைனியை நியமித்தது.   நயாப் சிங் சைனி முதல்வராக பதவி யேற்று (மார்ச் 12,2024) 2 மாதங்கள்  கூட ஆகாத நிலையில், பாஜக அர சிற்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வா யன்று வாபஸ் பெற்றனர். புதனன்று  3 சுயேச்சை எம்எல்ஏக்களும் காங்கி ரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர்.

அடுத்த சில நிமிடங்களில்  பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி யின் (ஜேஜேபி) தலைவர் துஷ்யந்த்  சவுதாலா காங்கிரஸ் ஆட்சி அமைக்  கும் வேலையை துவங்கினால் எங்  களது கட்சியைச் சேர்ந்த 10  எம்எல்ஏக்களும் ஆதரவு அளிக்க  தயாராக இருப்பதாக கூறினார். இத னால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது. ஆளும் பாஜக வின் பலம் 42 ஆக சுருங்கியது. பெரும்பான்மைக்கு தேவையான பலம் 46 என்ற நிலையில், இந்திய  தேசிய லோக் தள கட்சியின் ஒரே ஒரு  எம்எல்ஏ ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஆளுநருக்கு நெருக்கடி
இந்நிலையில், ஹரியானாவில் பாஜக ஆட்சி கவிழும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உத்தரவு பிறப்  பிக்க வேண்டும் என அம்மாநில  ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா வுக்கு முன்னாள் துணை முதல்வ ரும், ஜேஜேபி கட்சியின் தலைவரு மான துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதி உள்ளார். இதே போல சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆளு நருக்கு நெருக்கடி அளித்து வரு கின்றனர்.

காங்கிரஸ் பக்கம்  10 பாஜக எம்எல்ஏக்கள்
ஹரியானாவில் பாஜக ஆட்சி  கவிழ்ந்துள்ள நிலையில், புதனன்று  பாஜக ஆபரேசன் லோட்டஸ் (பாஜகவின் ஆள்பிடி வேலை)  மூலம் 4 ஜேஜேபி எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளதாக  பாஜக கூறியது. இதனால் ஹரி யானா வழக்கமான சித்து விளை யாட்டு மூலம் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  பாஜகவைச் சேர்ந்த 10 எம்எல்ஏக் கள் தங்கள் பக்கம் இருப்பதாக ஹரியானா காங்கிரஸ் தலைவ ரான பூபேந்திர சிங் ஹுடா பதி லடி கொடுக்க பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

‘ஆட்சியமைக்க  விருப்பம் இல்லை’
ஹரியானாவின் சட்டமன்ற ஆட்சிக் காலம் இன்னும் 5 மாதங்  களே உள்ளது. இதனால் காங்கி ரஸ் ஆட்சி அமைக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறது. ஜேஜேபி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள்  ஆதரவுடன் ஆட்சி அமைக்க காங்கி ரஸ் கட்சிக்கு பலம் இருந்தாலும் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. இது குறித்து ஹரியானா காங்கிரஸ் தலைவர் பூபேந்திர சிங் ஹுடா கூறுகையில்,”பாஜகவின் 10 எம்எல்ஏக்கள் எங்களுடன் தான்  உள்ளனர். ஆனால் குறுக்கு வழி யில் மக்களின் உணர்வுகளுக்கு மாறாக ஆட்சி அமைக்க மாட்டோம். ஹரியானாவில் குடியரசுத் தலை வர் ஆட்சியை அமல்படுத்த வேண்  டும். சில மாதங்களில் நடக்க இருக்கும் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்று ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்” என கூறினார்.