லக்னோ, டிச.20- உத்தரப் பிரதேச மாநிலத் தில் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டங்கள் எதையும் நடத்த முடியாத வகையில் அம்மாநில பாஜக அரசு தடை உத்தரவு பிறப்பிக்கத் திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத் திற்கு 2022-ஆம் ஆண்டு துவக் கத்தில் சட்டப்பேரவைத் தேர் தல் நடைபெறவுள்ள நிலை யில், பாஜக கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பே பிரச்சாரத்தை துவங்கி நடத்தி வருகிறது. பிர தமர் மோடி, உள்துறை அமைச் சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் உ.பி. மாநிலத்தைச் சுற்றிச்சுற்றி வரு கின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மக்களின் கோரிக்கை, விவசாயிகளின் பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டங் களை நடத்துவது பாஜகவிற்கு நெருக்கடியாக மாறி வருகிறது. இதையடுத்து, கொரோனா, ஒமைக்ரான் தொற்றுப் பரவ லைக் காரணம் காட்டி, அடுத்த 6 மாதங்களுக்கு, போராட்டங் களுக்கு தடை விதிக்க, ஆதித்ய நாத் தலைமையிலான உத் தரப்பிரதேச பாஜக அரசு முடிவு செய்திருப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் தேவேஷ் குமார் சதுர்வேதி, இதுதொடர்பாக சுற்றறிக் கையே அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அத்தியாவசிய சேவைக்கான துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அவர் கள் மீது ‘எஸ்மா’ சட்டத்தை பிர யோகிக்கவும் அரசு திட்டமிட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது.