states

சிவசேனாவின் 54 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ்!

மும்பை, ஜூலை 8- மகாராஷ்டிரா மாநிலத் தில் தாங்கள்தான் உண்மை யான சிவசேனா என்று, உத்  தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத்  ஷிண்டே ஆகிய இரண்டு தரப்புமே நோட்டீஸ் அளித் துள்ளன. மேலும், தங்களின் உத்த ரவை மீறிய எம்எல்ஏ-க்கள்  மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளன. அதனடிப்படையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்பட அவரது அணியின் 40 எம்எல்ஏக்களுக்கும், உத் தவ் தாக்கரே அணியின் 14  எம்எல்ஏ-க்களுக்கும் மகா ராஷ்டிரா சபாநாயகர் ராகுல்  நர்வேகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஒருங்கிணைந்த சிவ சேனாவின் கொறடாவாக இருந்த எம்எல்ஏ சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்  பட 16 பேரை தகுதி நீக்கம்  செய்ய சபாநாயகர் ராகுல்  நர்வேகாரிடம் கடிதம் வழங்கி  இருந்தார். அதேபோல் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்  கரே அணியின் எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய  கடிதம் வழங்கியது. எனினும்  இந்த கடிதங்கள் மீது சபா நாயகர் நர்வேகர் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.  

இதையடுத்து உத்தவ்  தாக்கரே தரப்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொட ர்ந்தது. ஷிண்டே உள்ளிட்ட வர்கள் மீது உடனடியாக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என  கூறியிருந்தது. உச்ச நீதிமன்  றமும், சபாநாயகர் விரை வில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில்தான் தகுதி நீக்க நடவடிக்கையின் முதல்கட்டமாக மகா ராஷ்டிரா சபாநாயகர் ராகுல்  நர்வேகர், அடுத்த 7 நாட்க ளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இரண்டு அணிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். “தகுதி நீக்க நடவடிக்கையின் தொடக்கமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 எம்எல்ஏக்களுக்கும், உத்  தவ் தாக்கரே அணியின்  14 எம்எல்ஏ-க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட் டுள்ளது’’ என நர்வேகர் தெரி வித்துள்ளார்.

;