முன்னணி விமான சேவை நிறு வனமான “இண்டிகோ”வின் தாய் நிறுவனமான “இன்டர் குளோப் ஏவி யேஷன் நிறுவனம்” பறக்கும் ஏர் டாக்சி யை இந்தியாவில் அறிமுகம் செய்ய வுள்ளது.
முதல் கட்டமாக தில்லி, மும்பை, சென்னை, பெங்க ளூரு உள்ளிட்ட பெருநகரங்களில் பைலட் மற்றும் 4 பயணிகள் என மொத்தம் 5 பேருடன் பறக்கும் “மிட் நைட்” ரக ஏர் டாக்சி அடுத்த 2 ஆண்டுகளில் பயன் பாட்டுக்கு வருகிறது. இவற்றின் மூலம் வழக்கமாக 60 முதல் 90 நிமிடங்களை எடுத்துக்கொள்ளும் சாலைப் பயண தூரத்தை “ஏர் டாக்சி” மூலம் ஏழு நிமி டங்களில் கடந்துவிடலாம்.
ஒரு ஓட்டத்தில் சுமார் 161 கிமீ தொலை வைக் கடக்கும் இந்த ஏர் டாக்சிகள் ஹெலிகாப்டர் போன்று செங்குத்துவாக் கில் எழும்பவும், தரையிறங்கவும் எளிதா னவை. சற்றே பெரிய மொட்டை மாடி களில் கூட ஏர் டாக்சிகள் வந்து செல்ல முடியும். சுமார் 200 ஏர் டாக்சிகளுடன் 2026 முதல் இவற்றின் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.