states

img

மீண்டும் வலுப்பெறும் மராத்தா போராட்டம்

அரசு வேலை, கல்வியில் இடஒதுக் கீடு கோரி மராத்தா ஆர்வலர் மனோஜ் ஜாரங்கேவின் தொடர்  போராட்டங்களால் பணிந்த மகாராஷ்டிரா  பாஜக கூட்டணி அரசு, கடந்த வாரம் மராத்தா இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்து மசோதா மூலம் சட்டம் இயற்றி,  ஓபிசி பிரிவில் மராத்தா மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க உள்ளதாக அறிவித்தது. 

மீண்டும் போராட்டம்
இந்நிலையில், ஞாயிறன்று மராத்தா  ஆர்வலர் மனோஜ் ஜாரங்கே தனது  சொந்த ஊரான அந்தர்வாலி சாரதி கிரா மத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,”மராத்தா மக்களை ஓபிசி பிரிவில் சேர்க்கும்வரை போராடப் போகி றேன். என் மீது தவறான குற்றச்சாட்டை  சுமத்த சிலருக்கு நெருக்கடி கொடுக்கின்ற னர். இந்த சதியின் பின்னணியில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கி றார். அவர் என்னைக் கொலை செய்ய  விரும்புகிறார். இதனால் பட்னாவிஸின் சாகர் பங்களா நோக்கிப் பேரணியாகச் செல்லத் தயாராக இருக்கிறேன். எனக்கு சலைன் மூலம் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்ய திட்டமிட்டுள்ளனர். அர சியல் தந்திரங்கள் மூலம் மராத்தா சமு தாயத்தை இழிவுபடுத்த பாஜக கூட்டணி  அரசாங்கம் முயற்சிக்கிறது” என கூறினார்.

மனோஜ் ஜாரங்கேவின் அறிவிப்பை தொடர்ந்து திங்களன்று மீண்டும் மராத்தா  சமுதாய மக்கள் மகாராஷ்டிரா முழுவதும்  போராட்டத்தை தொடங்கினர். மனோஜ்  ஜாரங்கேவை துணை முதல்வர் பட்னா விஸ் கொலை செய்ய திட்டமிட்டுள்ள தாகக் கூறி திர்த்புரி நகரில் போராடிய வர்கள், வன்முறை சம்பவங்களில் ஈடு பட்டனர். அரசுப் பேருந்திற்கு தீ வைத்தும்,  கடைகளை அடித்தும் நொறுக்கினர். 

ஜல்னாவில் ஊரடங்கு
மனோஜ் ஜாரங்கே தனது சொந்த  ஊரான அந்தர்வாலி சாரதி கிராமத்தில்  (ஜல்னா மாவட்டம்) இருந்து மும்பை  நோக்கி மீண்டும் பேரணி மேற்கொள்வ தாக தகவல் வெளியானதை அடுத்து, ஜல்னா மாவட்டத்திற்கு பேருந்து சேவை யை நிறுத்தி ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

இணைய சேவைகள் துண்டிப்பு
சமூகஊடகங்கள் மூலம் வன்முறை  பரவுவதை தடுக்க ஜல்னா, சத்ரபதி  சம்பாஜிநகர் மற்றும் பீட் உள்ளிட்ட  இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள் ளன. மேலும் மேற்குறிப்பிட்ட 3 மாவட்டங்  களின் எல்லைகளும் சீல் வைக்கப்பட் டுள்ளன.