போபால், செப்.17- பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் பூண்டுக்கு உரிய விலை கிடைக்காததால் மனம்நொந்த விவசாயிகள் தாங்கள் விளை வித்த பூண்டுகளை ஆற்றில கொட்டி அழித்தனர். செஹோர் மற்றும் ராஜ்கர் மாவட்டங் களை இணைக்கும் பாலத்தில் இருந்து அங்கு ஓடும் பார்வதி ஆற்றில் பூண்டுகளை கொட்டி விவசாயிகள் அழித்தனர். ஒரு குவிண்டால் (100 கிலோ) பூண்டு 2,500-3,000 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படுகிறது, ஆனால், சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. பூண்டு மூடைகளை விவசாயிகள் அழிக்கும் நிகழ்வு செஹோர் மாவட்டத்தில் உள்ள அஷ்டா நகரத்தில் நடைபெற்றது என கிசான் ஸ்வராஜ் சங்காதன் (கேஎஸ்எஸ்) நிர்வாகி தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு மத்தியப்பிர தேச மாநிலம் மந்த்சூரில் பூண்டுக்கு நியாய மான விலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு விவசாயிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.