புதுச்சேரி, செப்.14- புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் கரையாம் புத்தூர் கிராமத்தில் 2015ஆம் ஆண்டு நில அளவை பதி வேடுகள் துறை சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த 54 ஏழை, எளிய பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு குடி மனைப் பட்டாவுக்கான உத்த ரவுகள் வழங்கப்பட்டது. இதற்காக கரையாம்புத்தூர் காவல் நிலையம் அருகில் இடம் தேர்வு செய்யப் பட்டது. ஆனால் அந்த இடத்தை இதுநாள் வரை உரியவர்களிடம் ஒப்படைக் கவில்லை. எனவே, உடனடியாக இடத்தை உரியவர்களிடம் வழங்கக் கோரி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் செய லாளர் சரவணன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநிலச் செயலா ளர் ஆர். ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், தமிழ்ச் செல்வன், பிரபுராஜ், மாநிலக் குழு உறுப்பினர் கள் சங்கர், கலியன், இள வரசி, கொம்யூன் கமிட்டி உறுப்பினர்கள் வடிவேலு, அரிதாஸ், சேகர் கலைச் செல்வன், கிளைச் செயலா ளர் சதாசிவம், மூத்த உறுப்பினர்கள், சண்முகம், தேவராசு, பக்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
துணை ஆட்சியர் உறுதி
இந்த போராட்டத்தை தொடர்ந்து, மாவட்டத் துணை ஆட்சியர் வினை ராஜை சந்தித்த கட்சித் தலை வர்களிடம் ஒரு வாரத் திற்குள் இலவச மனைப் பட்டா வழங்கிய இடத்தை உரியவர்களிடம் ஒப்ப டைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப் பட்டது.