states

img

ஒரே ரயிலை 27 முறை கொடியசைத்து துவக்கி வைத்த பிரதமர் மோடி

ஹைதராபாத், ஜூலை 10- ஒரே ரயிலை, 27 முறை கொடி யசைத்துத் துவக்கி வைத்த ஒரே  பிரதமர் நரேந்திர மோடிதான் என  பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சி  கிண்டல் செய்துள்ளது. மணிக்கு 180 கி.மீ. வரை செல்லும்  அதிவேக ரயில் என்ற அறிவிப்போடு  வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத் தப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் இன்னும் 83 கிலோ  மீட்டரைத் தாண்டவில்லை.  கடந்த 2018-இல் தயாரிக்கப் பட்டு, உ.பி. தேர்தலையொட்டி 2019-இல் தில்லி - வாரணாசி இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது. தற்  போது 24 மாநிலங்களில், 27 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. இந்த 27 வந்தே பாரத் ரயில்களை யும், ஒவ்வொரு முறையும் பிரத மர் நரேந்திர மோடியே, ஒவ்வொரு  இடத்திற்கும் நேரில் சென்றும், காணொலி மூலமும் கொடியசைத்து தொடக்கி வைத்தார். ரயில்வே துறைக்கு தனியாக அமைச்சர் இருக்கும் நிலையில், ஒவ்வொரு ரயிலையும் பிரதமர் மோடியேதான் தொடங்கி வைக்க வேண்டுமா? என்று கேள்விகள் எழுந்தாலும், பிரதமர் மோடி கொடி யசைக்கச் செல்வதை நிறுத்துவ தாக இல்லை.  இந்நிலையில்தான், ஒன்றிய அர சுடன் தொடர்ந்து மோதல் போக் கைக் கடைப்பிடித்து வரும், தெலுங்  கானாவை ஆளும் பாரத ராஷ்டிர  சமிதி கட்சியின் செய்தித் தொடர்பா ளர் சதீஸ் ரெட்டி, தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில், “ஒரே ரயிலை  (வந்தே பாரத்) 27 முறை பிரதமர்  மோடி கொடியசைத்து தொடக்கி  வைத்துள்ளதாகவும், இதுதான்...  ஒரு நாடு... ஒரு ஸ்டேஷன் மாஸ் டர்..” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் பிரதமருக்கு வாக்களித்த நிலையில், ஸ்டேஷன் மாஸ்டர் கிடைத்துள்ளதாகவும் கிண்டல் செய்துள்ளார். ஏற்கெனவே, பாஜக ‘வாஷிங் மெஷின்’ என்றும் மோடி ‘வாஷிங் பவுடர்’ என்றும் காங்கிரஸ் வெளி யிட்ட போஸ்டர்கள் சமூகவலை தளங்களில் வைரலான நிலையில்,  சதீஸ் ரெட்டியின் ‘ஒரே நாடு ஒரே ஸ்டேஷன் மாஸ்டர்’ போஸ்டரும் வைரலாகியுள்ளது.