புதுதில்லி, ஏப்.17- இந்தியை விட ஆங்கிலம் இணைப்பு மொழி யாக இருக்க வேண்டும் என்பதற்கான வலு வான நிலை உள்ளது என்பதை புலம்பெயர்தல் மற்றும் வளர்ச்சி குறியீடுகள் பற்றிய தரவுகள் காட்டுகின்றன. இந்தியாவிலுள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 12ல் வசிப்பவர்கள் மட்டுமே தகவல் பரிமாற்றத்திற்கு இந்தியை தங்களது முதல் விருப்ப மொழியாகத் தேர்வு செய்திருப்பதாக 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனால், ஒரு எச்சரிக்கை உள்ளது. “இந்தி” என்பது போஜ்பூரி, ராஜஸ்தானி, இந்தி, சத்தீஸ்கரி உள்ளிட்ட 56 மொழிகளை (தாய் மொழிகள்) உள்ளடக்கிய ஒரு சொல்லாடலாக மாற்றப் பட்டுள்ளது. 43 சதவீத இந்தியர்கள் ‘‘இந்தி’’ மொழியைப் பேசுவதாக கணக்கு காட்டப்பட்டா லும் 26 சதவீதத்தினர் மட்டுமே குறிப்பாகத் தங்க ளது தாய்மொழியாக இந்தி பேசுகின்றனர். இந்தி அலுவல் மொழியாக ஆக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை இது எழுப்பு கிறது. மாநிலங்களின் குடிமக்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்போது, ஆங்கிலத்திற்கு மாற்றாக “இந்திய மொழி யில்” -அதாவது ‘இந்தியில்’ அது இருக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததன் பின்னணியில் இக் கேள்வி எழுகிறது. எதிர்கட்சிகளின் விமர்ச னத்தை இது கிளப்பியது. ஆங்கிலத்தின் கார ணமாகத்தான் இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத் தலைநகராக பெங்களூரு மாறியது என கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலை வர் டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டார்.
‘பெரும்பான்மையானவர்களால்’ பேசப் படுவதால் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. பெரும்பான்மையான வர்களால் பேசப்படுகிறது என்ற வாதத்தை புள்ளி விபரங்கள் நிராகரிக்கின்றன . மாறாக, இந்திய குடிமக்கள் வாழ்க்கை மேம்பாட்டை தேடும்போது பயனளிப்பது இந்தியா அல்லது ஆங்கிலமா என்ற பயன் நெறிமுறைக் கோட் பாடு சார்ந்த கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பட்டு வரு கிறது. ஆங்கிலம் பேசுபவர்களை அதிக விகிதத் தில் கொண்டுள்ள பிராந்தியங்கள் அதிகள விலான மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், அதிக விகி தத்தில் இந்தி பேசுபவர்களைக் கொண்ட மாநி லங்கள் குறைந்த மனித வளர்ச்சிக் குறி யீட்டைக் கொண்டுள்ளன- என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மனித வளர்ச்சிக் குறியீட்டின் ஒப்பீடு தெரிவிக்கிறது. மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கும், ஆங்கிலம் பேசுபவர்களின் அதிக விகிதத்திற்கும் இடையே நிச்சயமான தொடர்புள்ளது என்பதே இதன் பொருளாகும்.
அதிக புலம்பெயர்தல்
புலம்பெயர்தல் குறித்த புள்ளிவிவரங்களி லும் இது வெளிப்படுகிறது. மேம்பட்ட வாழ்வா தாரங்களைத் தேடி இந்தி பேசும் மாநிலங்களிலி ருந்து அதிகமான மக்கள் இந்தி பேசாத பகுதி களுக்கு புலம்பெயர்கின்றனர். 2017 பொருளா தார ஆய்வறிக்கையில், முன்பதிவு செய்யப் படாத பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் பற்றிய தரவுகளின் பகுப்பாய்வு, வேலை தொடர்பாக நடைபெற்ற புலம்பெயர்தலை அளவிட பயன்படுத்தப்பட்டது. “வேலை தொடர்பான காரணங்களுக்காக பயணம் செய்யக் கூடிய குறைவான வசதி படைத்த சாதாரண ஏழை மக்களுக்கு இந்த வகை ரயில் பயணமானது பயன்படுகிறது” என இந்த அறிக்கை வாதிட்டது. 2011 மற்றும் 2016ம் ஆண்டு களுக்கு இடையிலான காலத்தில் இவ்வாறு பயணித்த 9 மில்லியன் (90 லட்சம்) பயணி களின் நகர்வுகள் பரிசீலிக்கப்பட்டன. 200 கிலோமீட்டர் தொலைவிற்கும் குறைவான பய ணங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை.
2015-16 ஆம் நிதியாண்டிற்கான மாநில அளவிலான நிகர பயணிகளின் நகர்வின்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களில் நிகர குடியேற்றம் நடைபெற்றுள்ளது. இதர மாநிலங்களில் இன்று புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை விட இம்மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தர்காண்ட், ஹரியானா, இமாச்சலப்பிர தேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்க ளில் நிகர வெளியேற்றம் அதிகமாக உள் ளது. நிகர வெளியேற்றத்தை பதிவு செய்த மாநி லங்கள் இந்தி பேசுபவர்களின் அதிக விகி தத்தைக் கொண்ட மாநிலங்களுடன் பரவலாக ஒத்துப் போகின்றன. இதற்கு நேர்மாறாக, நிகர குடியேற்றத்தைப் பதிவு செய்த மாநி லங்கள், இந்தி பேசுபவர்கள் குறைவாக உள்ள பகுதிகளுடன் பரவலாக ஒத்துப் போகின்றன. கேரளா, ஒடிசா மற்றும் ஓரளவிற்கு மகா ராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் விதிவிலக்காக உள்ளன.
தங்கள் மக்கள்தொகையில் குறைந்த பட்சம் 50 சதவீதத்தினர் இந்தி பேசுபவர்களாக உள்ள இந்தி மாநிலங்களின் நிகர குடியேற்றம் எதிர்மறையாக இருப்பதையே 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது. இம்மாநிலங்களில் புலம்பெயர்தலில் குடியேறியவர்களின் எண்ணிக்கையை விட வெளியேறியவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதை இது சுட்டிக் காட்டுகிறது. இந்தி பேசாத மாநிலங்களில், நிகர புலம்பெயர்தல் என்பது நேர்மறையாகவே இருந்தது. வேலை மற்றும் கல்விக்கான புலம்பெயர்தல் உள்ளிட்ட அனைத்து வகையான புலம்பெயர்தல்களிலும் இத்தகைய போக்கே காணப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கு புலம்பெயர்கின்றனர். மேலும், ஒரு பகுதியின் மனிதவள மேம்பாட்டு குறியீட்டுக்கும் ஆங்கிலம் பேசுபவர்களின் விகிதத்திற்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. இந்தி மொழிக்கு பதிலாக ஆங்கி லமே இணைப்பு மொழியாக இருப்பதற்கு வலு வான காரணத்தை இது பரிந்துரைக்கிறது. ஒன்றிய அரசு குறிப்பிடுவதற்கு நேர் எதிராக இது காணப்படுகிறது.
நன்றி: 15/04/2022 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்) தமிழில்: எம்.கிரிஜா