states

மனித உரிமை மீறல்களில் உத்தரப்பிரதேசம் முதலிடம்

புதுதில்லி, டிச.9- மனித உரிமை மீறல்களில் உத்தரப்பிர தேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக நாடா ளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மனித உரிமை மீறல் வழக்குகள் அதிக ரித்து வருகிறதா? என திமுக உறுப்பினர் சண் முகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “ கடந்த மூன்று நிதியாண்டுகளில் (அக் டோபர் 31 வரை) தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஆண்டுதோறும் பதி யப்படும் மனித உரிமை மீறல் வழக்குகளில் 40 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகி யுள்ளன. மொத்த மனித உரிம மீறல் வழக்குகளில், உத்தரபிரதேசத்தில் 2018-19-இல் 41,947 வழக்குகள், 2019-20-இல் 32,693 வழக்குகள், 2020-21-இல் 30,164 வழக்குகள், 2021-22-இல் 24,242 வழக்குகள் பதிவாகியுள்ளன. தில்லியில் 2018-2019-இல் 6,562, 2019-2020-இல் 5,842, 2020-2021-,ல் 6,067 மற்றும் இந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வரை 4,972 வழக்குகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்தார்.

;