states

ஒடிசா, ம.பி., ஜார்க்கண்ட்டில் தொடர்ந்து தடம்புரளும் ரயில்கள்!

போபால், ஜூன் 7- ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டம் பகானகா பஜார் ரயில் நிலையம் அருகே, ஜூன் 2-ஆம் தேதி இரவு 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். உடல்  நசுங்கிப் பலியான பலரது உடல்கள் இப்போது  வரை அடையாளம் காணமுடியாத நிலையில்  உள்ளன. நூற்றுக்கணக்கானோர் காயங்களு டன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்தச் சம்பவம் மற்றும், அது ஏற் படுத்திய அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை. இந்நிலையில், 288 பேரை பலிகொண்ட கோர விபத்திற்குப் பின்னரும், அதே ஒடிசாவில் அடுத்தடுத்து 2 ரயில் விபத்துக்கள், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலா 1 ரயில் விபத்து என, நாள்தோறும் ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒடிசாவில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில், திங்களன்று பார்கார் என்ற பகுதி யில் தடம் புரண்டதில் 5 பெட்டிகள் சேதமடைந் தன. முந்தைய விபத்து ஏற்பட்ட பாலசோர் பகுதி யிலிருந்து 400 கி.மீ. தொலைவில் இந்த சம்ப வம் நடந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாலசோர் ரயில் விபத்தைப் போலவே, இந்த ரயில் தடம்  புரண்டதற்கான காரணம் குறித்தும் அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, செவ்வாயன்று ஒடிசாவில் சென்றுகொண்டிருந்த செகந்திராபாத் - அகர் தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து  புகை வெளியான சம்பவம் அடுத்த பரபரப்பை  ஏற்படுத்தியது. முதலில் B-5 பெட்டியில் புகை வருவதைக் கண்டு பயணிகள் சிலர் அலாரம் எழுப்பினர். பிரம்மாபூர் நிலையத்திற்கு வந்த போது ஊழியர்கள், ரயிலில் ஏற்பட்டிருந்த மின்னணு சாதனப் பிரச்சனையை  உடனடி யாக சரி செய்தனர். எனினும் ரயிலில் இருந்து  கீழே இறங்கிய பயணிகள், அச்சம் காரணமாக  மீண்டும் ரயிலில் ஏற மறுத்து, தகராறில் ஈடுபட்ட னர். அவர்களை ரயில்வே ஊழியர்கள் சமாதா னப்படுத்தினர். செவ்வாயன்று மாலை, ஜார்க்கண்ட் மாநி லத்திலும் ரயில் ஒன்று விபத்தில் இருந்து தப்பி யது. இங்குள்ள பொக்காரோ மாவட்டம், போஜு திஹ் ரயில் நிலையம் அருகே சந்தால்டிஹ் ரயில்வே கிராசிங் உள்ளது. செவ்வாயன்று மாலை, இந்த வழித்தடத்தில் தில்லி - புவனேஸ்  வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இத னால் ரயில்வே கிராசிங் மூடப்பட்டது. ரயில் வந்து  கொண்டிருந்த சமயத்தில், அந்த கிராசிங்கின் கேட்டில் ஒரு டிராக்டர் திடீரென மோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ரயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தினார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே கேட் மீது  டிராக்டர் மோதியதும், டிராக்டர் ஓட்டுநர் கீழே  இறங்கி தப்பிச் சென்றுவிட்டார். அந்த டிராக்டர்,  ரயில்வே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்  டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். ரயில்வே கிராசிங்கில் பணியாற்றிய கேட்மேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவங்களின் வரிசையில், புத னன்று மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதி யில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலும், 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள  ஷாபுரா பிடோனி நிலையத்தில் உள்ள பாரத்  பெட்ரோலியம் கிடங்கு அருகே இந்த சம்பவம்  நடந்துள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவ னத்திற்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கில், எல்பிஜி எரிவாயுவை நிரப்புவதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும்,  யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

முதன்மை வழித்தடத்தில் செல்லும் ரயில்  போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் உண்டாக வில்லை. பயணிகள் ரயில் சேவை வழக்கம் போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று காலை முதல் மீட்பு பணிகள் நடைபெற்று வரு கின்றன. அடுத்த சில மணி நேரத்தில் சீர மைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்று மத்திய மேற்கு ரயில்வே  துறை தலைமை செய்தி தொடர்பு அதிகாரி தெரி வித்துள்ளார். இந்தச் சம்பவங்கள் மட்டுமன்றி, தமிழ்நாட்  டில் திருச்சி அருகே ரயில்வே தண்டவாளத்தில்  டயர் வைக்கப்பட்டிருந்தது, திருப்பத்தூர் ரயில்  நிலையத்தில் சிக்னல் உடைக்கப்பட்டது, கொல்லம் - சென்னை செல்லும் சென்னை எழும்பூர் விரைவு ரயில் பெட்டியில் விரிசல் ஏற்பட்டது, என கடந்த நான்கு நாட்களில் பல்  வேறு மாநிலங்களில் நிகழ்ந்த ரயில்வே விபத்து  தொடர்பான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.