புதுதில்லி, டிச. 11- கோவை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை அழிவுக்கு உள்ளாக் கிக்கொண்டிருக்கும் மோசமான பிரச்சனைகளைக் களைந்து, அவற் றைக் காப்பாற்றிட ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கோரினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர்.நடராஜன் பேசிய தாவது: 2020 ஜனவரி முதல் கோவிட் பெருந்தொற்றால் இந்தியா முழு வதுமுள்ள குறிப்பாக, தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் நகரத்திலுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அழி வுக்குள்ளாக்கும் மிக மோசமான பிரச்ச னைகளை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். கோயம்புத்தூர் நகரம், பம்ப்செட் மோட்டார் நிறுவனங்களுக்காகவும், மாவு அரைக்கும் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுக்காகவும், தொழில் துறை மையமாகவும் அனைவராலும் நன்கறியப்பட்டதாகும்.
இந்த நிறுவ னங்கள் 4.5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைக்கு அமர்த்துகின்றன. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் இந்த நிறுவனங்க ளும் ஒன்றோடொன்று இணைக்கப் பட்டவைகளாகும். ஆனால், இந்த நிறு வனங்கள், தற்போது மூலப்பொருட்க ளின் அதிகப்படியான விலை ஏற்றம், நியாயமற்ற ஜிஎஸ்டி வரி விகிதம், சந்தை வசதிகள் இன்மை, மின்சார வச திக் குறைவு, முறையான கட்டமைப்பு வசதிகளின்மை, போன்ற பாதகமான பல பிரச்சனைகளால் கடுமையான கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளன. சிறு, நடுத்தர நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு காணவும் கோயம்புத்தூரிலுள்ள பல லட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குள் போட்டித் திறனை உருவாக்க, மூலப் பொருட்கள் விலையை ஒழுங்கு படுத்திட வேண்டும். ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் கணிசமான அளவிற்குக் குறைத்திட வேண்டும். சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான திறன் பயிற்சி மையத்தை கோயம்புத்தூரில் அமைத்திட வேண்டும். சிறு, நடுத்தர நிறுவனங்களின் பொருட்களுக்கு, தனிப்பட்ட சந்தை வசதிகள் மற்றும் வங்கி வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். இரும்பு மற்றும் சிமெண்ட் விலைகளையும், சிறு, நடுத்தர நிறுவ னங்கள் சம்பந்தமான விஷயங்க ளையும் நிலைப்படுத்திட வேண்டும். முறையான மின்சார மானியம் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். சிறு, நடுத்தர நிறுவனங்க ளுக்கு, தனிப்பட்ட, தொழிற்பேட்டை மற்றும் வங்கிகள் ஏற்படுத்திட வேண்டும். இந்நடவடிக்கைகளை மேற் கொண்டு, சிறு, நடுத்தரநிறுவனங்க ளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒன்றிய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார். (ந.நி.)