புதுதில்லி, ஜூலை 26 - காவிரி ஆணையத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதற்கான தடையை ஆகஸ்ட் 10 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் கடந்த ஜூன் 17 அன்று நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போது, அந்தக் கூட்டத்தில் காவிரி யின் குறுக்கே தாங்கள் கட்டுவதாக முடிவெடுத்திருக்கும் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தரிடம் கர்நாடகா அரசு கோரிக்கை வைத்தது. ஆணையமும் கர்நாடகாவின் இந்த கோரிக்கையை ஏற்றது. காவிரி ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தது. ஆனால், காவிரி ஆணையத்தின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூறி தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பிர தமர் நரேந்திர மோடி, ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோ ருக்கு இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனால், ஜூன் 17, ஜூன் 23, ஜூலை 6 என மூன்று முறை காவிரி ஆணை யத்தின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக, ஜூலை 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. அதற்கு ஒருநாள் முன்னதாக ஜூன் 21 அன்று, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கள் ஏ.எம். கன்வில்கர், ஏ.எஸ். ஓகா, ஜே.பி. பரிதிவாலா அமர்வில் விசார ணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து எந்த விவாதமும் நடத்தக் கூடாது. அது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இந்த வழக்கில் காவிரி ஆணையத்தின் கருத்தை நீதிமன்றம் அறிந்து கொள்ள விரும்புகிறது. அத னால், ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது’ எனக் கூறி, ஜூன் 26-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். அதன்படி, வழக்கு செவ்வாயன்று (ஜூலை 26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறி ஞர், “தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற த்தில் தொடர்ந்துள்ள வழக்கு தொடர் பாக பதில் அளிப்பதற்கு எங்களுக்கு கால அவகாசம் வேண்டும். மேலும் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறி ஞர் ஆஜராக முடியாததால் இவ்வழ க்கை வேறொரு நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “எங்களுக்கும் கால அவ காசம் வேண்டும். ஏனென்றால் இந்த வழக்கு தொடர்பாக ஒரு இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். எனவே வழக்கின் விசாரணையை வேறொரு நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். தமிழக அரசுத் தரப்பில், “வழக்கு முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்திலும் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட ஏ.எம். கன்வில்கர் தலைமை யிலான உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அத்து டன் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதற்கான தடையையும் நீட்டித்தது.